வாசகர்களே !
Registry என்பது, விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டம் குடும்பத்தில் மிகவும் அரிதாக அறியப்பட்ட ஒரு விடயம் ஆகும். இது விண்டோஸ் இன் இதயம் என்று சொல்லப்படலாம். இங்கு நான் விண்டோஸ் xp இணை எவ்வாறு எடிட் செய்யலாம் என்பதனை தரப் போகிறேன். இது மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும். ஏதாவது சிறு பிழை ஏற்பட்டாலும் உங்கள் கணிணி செயல் இழந்து விடலாம். எனவே registry எடிட் செய்யப்பட முன்னதாக அதனை backup செய்து கொள்வது நல்லது.
முதலில் registry ஐ எவ்வாறு backup செய்வது என்று பார்ப்போம். இது இரு வகையாக செய்யப்படலாம்.
1 . குறித்த ஒரு key இனை backup செய்து கொள்ளல்.
ஸ்டார்ட் பட்டன் இலுள்ள ரன் command ஐ கிளிக் செய்யும் போது வரும் டயலாக் பாக்ஸ் இல் regedit என type செய்து registry ஐ ஓபன் செய்து கொள்ளவும்.
பின்னர் backup செய்ய வேண்டிய போல்டெர் ஐ ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் export ஐ கிளிக் செய்யவும்.
வரும் டயலாக் பாக்ஸ் இல் எமக்கு விருப்பமான ஒரு பெயரை type செய்து விருப்பமான location ஐ தெரிவு செய்து .reg extention உடைய file ஆக சேமிக்கவும். பொதுவாக backup செய்யும்போது pen டிரைவ் அல்லது floppy டிரைவ் போன்றவற்றை சேமிக்கும் இடமாகக் குறிப்பிடுவது நன்று.
இனி இதனை எவ்வாறு restore செய்வது எனப் பார்ப்போம். இது மிகவும் இலகுவானது. சேமித்த குறித்த கோப்பை இரு முறை கிளிக் செய்யவும். அது தானாக registry இல் restore ஆகும்.
2 முழு registry ஐயும் backup செய்தல்.
ஸ்டார்ட் --- ஆல் ப்ரோக்ராம் --- accessories --- சிஸ்டம் tool --- backup இனை தெரிவு செய்து வரும் விசார்ட் இல் backup அண்ட் செட்டிங்க்ஸ் இனை தெரிவு செய்க. தொடர்ந்து வரும் டயலாக் பாக்ஸ் இல் let me choose what to backup இனை தெரிவு செய்து my கம்ப்யூட்டர் இனை செலக்ட் செய்யவும். இதன் போது வரும் சிஸ்டம் ஸ்டேட் இனை டிக் செய்து சேமிக்க வேண்டிய location ஐக் குறிப்பிட்டு next செய்யவும்.
இதனை restore செய்ய மேலே சொன்னது போல் ஸ்டார்ட் ---- ஆல் ப்ரோக்ராம் ----- accessories ----- சிஸ்டம் tool ---- backup சென்று, வரும் விசார்ட் இல் restore அண்ட் செட்டிங்க்ஸ் செலக்ட் செய்து restore செய்யலாம். பின்னர் கம்ப்யூட்டர் ஐ restart செய்தல் வேண்டும்.
பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
நியாயமான விமர்ஷனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
நன்றி.
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
புதன், 1 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)