பக்கங்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

Registry Editing Lesson 1

வாசகர்களே !
Registry என்பது,  விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டம் குடும்பத்தில்  மிகவும் அரிதாக அறியப்பட்ட ஒரு விடயம் ஆகும்.  இது விண்டோஸ் இன் இதயம் என்று சொல்லப்படலாம். இங்கு நான் விண்டோஸ் xp இணை எவ்வாறு எடிட் செய்யலாம் என்பதனை தரப் போகிறேன். இது மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும். ஏதாவது சிறு பிழை ஏற்பட்டாலும்  உங்கள் கணிணி செயல் இழந்து விடலாம். எனவே registry  எடிட் செய்யப்பட முன்னதாக அதனை backup  செய்து கொள்வது நல்லது.
முதலில் registry  ஐ எவ்வாறு backup  செய்வது என்று பார்ப்போம்.  இது இரு வகையாக செய்யப்படலாம்.
1 . குறித்த ஒரு key  இனை backup  செய்து கொள்ளல்.
         ஸ்டார்ட் பட்டன் இலுள்ள ரன் command ஐ கிளிக் செய்யும் போது வரும் டயலாக் பாக்ஸ் இல் regedit  என type செய்து registry    ஐ ஓபன் செய்து கொள்ளவும்.

பின்னர் backup  செய்ய வேண்டிய போல்டெர் ஐ ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் export  ஐ கிளிக் செய்யவும்.

வரும் டயலாக் பாக்ஸ் இல் எமக்கு விருப்பமான ஒரு பெயரை type செய்து விருப்பமான location  ஐ தெரிவு செய்து .reg extention உடைய file ஆக சேமிக்கவும். பொதுவாக  backup  செய்யும்போது  pen  டிரைவ் அல்லது floppy  டிரைவ் போன்றவற்றை சேமிக்கும் இடமாகக் குறிப்பிடுவது நன்று.
இனி இதனை எவ்வாறு restore  செய்வது எனப் பார்ப்போம். இது மிகவும் இலகுவானது. சேமித்த குறித்த கோப்பை இரு முறை கிளிக் செய்யவும்.  அது தானாக registry  இல் restore  ஆகும்.
2  முழு  registry ஐயும் backup  செய்தல்.
 ஸ்டார்ட் --- ஆல் ப்ரோக்ராம்  --- accessories --- சிஸ்டம் tool  ---  backup  இனை தெரிவு செய்து வரும் விசார்ட் இல் backup அண்ட்  செட்டிங்க்ஸ் இனை தெரிவு செய்க. தொடர்ந்து வரும் டயலாக் பாக்ஸ் இல் let  me  choose  what  to  backup  இனை தெரிவு செய்து my கம்ப்யூட்டர் இனை செலக்ட் செய்யவும். இதன் போது வரும் சிஸ்டம் ஸ்டேட் இனை டிக் செய்து சேமிக்க வேண்டிய location  ஐக் குறிப்பிட்டு next  செய்யவும்.
 
இதனை restore  செய்ய மேலே சொன்னது போல் ஸ்டார்ட் ---- ஆல் ப்ரோக்ராம் ----- accessories  ----- சிஸ்டம் tool   ---- backup  சென்று, வரும் விசார்ட் இல் restore  அண்ட் செட்டிங்க்ஸ் செலக்ட் செய்து    restore  செய்யலாம். பின்னர் கம்ப்யூட்டர் ஐ restart செய்தல் வேண்டும்.

பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டும்படி பணிவுடன் வேண்டுகிறேன். 
நியாயமான விமர்ஷனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக